Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Shri Thaathiswarar Temple,Sitherkaadu,Thirumanam Village,Poonamallee,Chennai |

| அருள்மிகு ஶ்ரீ ப்ரசூனகுந்தளாம்பிகை அம்மன் உடனுறை அருள்மிகு தாத்திரீஸ்வரர் கோயில் திருக்கோவில்,சித்தர்காடு (திருமணம்) , பூந்தமல்லி,சென்னை


Arulmigu Shri Kailasanathar Temple,Mathavaram,Chennai



இறைவர் : அருள்மிகு ஶ்ரீ தாத்திரீஸ்வரர்  

இறைவி :ஶ்ரீ கற்பகாம்பாள்

தல மரம் :மரம்

தீர்த்தம் :

ChennaiDistrict_ ThaathreeswararTemple_Thirumanam_shivanTemple


அருள்மிகு ஶ்ரீ ப்ரசூனகுந்தளாம்பிகை அம்மன் உடனுறை அருள்மிகு தாத்திரீஸ்வரர் கோயில் திருக்கோவில்,சித்தர்காடு (திருமணம்) , பூந்தமல்லி,சென்னை , தல வரலாறு.

இத்தலம் சுவாதி நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய நட்சத்திர கோயில் மூலவருக்கு 27 நட்சத்திரங்களுக்கு என 27 நெய்தீபம் ஏற்றி வணங்குகிறார்கள். மூலவர் அருகிலேயே அடுத்த சன்னதியில் அம்மன் அருள் புரிகிறார்கள். விநாயகர், சுப்ரமணியர், நடராஜர் சன்னதிகள் உள்ளது. முருகனுக்கு உகந்த நாட்களில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திரக் காரர்கள் விசேஷ நாட்களில் கலந்து கொண்டு வழிபட்டு வேண்டிக் கொள்கிறார்கள்.

திருவாதிரை நாளில் நடராஜ பெருமானுக்கும் அம்பாளுக்கும் திருமண உற்சவம் நடைபெறுகிறது. திருமணம் ஆகாதவர்கள் அன்று கலந்துகொண்டு திருமணம நடக்க வேண்டுகிறார்கள். மணம்பொருந்திய வனத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். மேலும் இங்கு படுக்கை ஜடாமுடி சித்தர் பிராணதீபிகா சித்தர் இங்கு இறைவனை வணங்கி வசித்ததால் சித்தர்கள்காடு என்பது என மருவி சித்துக்காடு என பெயர் ஏற்பட்டது.

அருமையான சிவஸ்தலம் என்பது உண்மை பக்தர்கள் கண்டிப்பாக சென்று இறைவனை தரிசனம் செய்து அருள் பெறலாம்.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோவில்,சித்தர்காடு (திருமணம்) ,
பூந்தமல்லி,சென்னை

சென்னை மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 8.00 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5,00 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும்.



அமைவிடம்:

இந்த புண்ணியதலம் சென்னை பூந்தமல்லிக்கு 8 கி.மீ.தூரத்தில் தண்டுரை செல்லும் வழியில் திருமணம் கிராமத்தில் அமைந்துள்ளது. போக்குவரத்து வசதி நேரடியாக இல்லை.குறித்த நேரத்தில் மட்டுமே பேரூந்து வசதி உள்ளதால் தனியார் வாகனம் மூலம் சென்று திரும்பலாம். பட்டாபிராம் வழியாகவும் சென்று வரலாம். திருவள்ளூர் 24 கி.மீ,. வெள்ளவேடு 4 கி.மீ. பட்டாபிராம் 5 கி.மீ. ஆவடி 9 கி.மீ. தூரத்தில் உள்ளது.